Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
லீக் கிண்ணத்தின் இறுதிப்போட்டி, வெம்பிளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றிருந்த நிலையில், பெனால்டிகளில் லிவர்பூலைத் தோற்கடித்த மன்செஸ்டர் சிற்றி, கிண்ணத்தை கைப்பற்றியது.
இப்போட்டியில், மன்செஸ்டர் சிற்றியின் வழமையான கோல்காப்பாளர் ஜோ ஹார்ட்டுக்கு பதிலாக, 34 வயதான ஆர்ஜென்டீனா கோல்காப்பாளர் வில்லி காபல்லேரோ, மன்செஸ்டர் சிற்றியின் பயிற்சியாளர் மனுவல் பெலிகிரினியால் களமிறக்கப்பட்டிருந்த நிலையில், அவரே இறுதிப்போட்டியின் நாயகனாக திகழ்ந்திருந்தார்.
போட்டியின் வழமையான நேரத்தின் 49ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியின் பெர்ணான்டின்ஹோ கோலைப் பெற்றிருந்த நிலையிலும் போட்டியின் 83ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் பிலிப்பே கௌடின்ஹோவும் கோலைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதில், மன்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த இரண்டாவது கோல் பெறும் வாய்ப்பை, முன்னாள் லிவர்பூல் வீரரான ரஹீம் ஸ்டேர்லிங் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இடம்பெற்ற பெனால்டிகளில், மன்செஸ்டர் சிற்றியின் பெர்ணான்டின்ஹோ அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டு திரும்பியிருந்தது. எனினும் பின்னர், ஜீஸஸ் நவாஸ், சேர்ஜியோ அக்ரோ ஆகியோர் கோல்களை உட்புகுத்தியிருந்த நிலையில், லிவர்பூலின் லூகாஸ், பிலிப்பே கௌடின்ஹோ, அடம் லலானாவின் உதைகளை காபல்லேரோ தடுக்க, அடுத்து மன்செஸ்டர் சிற்றியின் யாயா தோரே அடித்த பந்து கோல்கம்பத்துக்குள் உட்புக, 3-1 என்ற ரீதியில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago