Shanmugan Murugavel / 2016 மே 03 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி அணிக்கு பலரிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்துள்ளன.
லெய்செஸ்டர் சிற்றி, எவெர்ற்றன், இங்கிலாந்து அணியின் முன்னாள் முன்னாள் முன்களவீரரான கரி லினேகர், தனது சொந்த நகர அணியின் அடைவை, தனது வாழ்நாளின் மிகப்பெரிய விளையாட்டு அதிர்ச்சி என வர்ணித்துள்ளார்.
இதேவேளை, கருத்து தெரிவித்த, கால்பந்தாட்ட உலகை நிர்வகிக்கும் பீபாவின் தலைவரான ஜியானி இன்பான்டினோ, லெய்செஸ்டரின் அழகான கதை வியப்பு மிகுந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரோன், தனது வாழ்த்துகளில், இது, அசாதாரணமானது, முற்றிலும் உரித்தான பிறீமியர் லீக் பட்டம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டுவீட் செய்துள்ள உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லியனல் மெஸ்ஸி, தாங்கள் எல்லாரும் கால்பந்தாட்டத்தை விரும்ப இதுதான் காரணம், வாழ்த்துகள் என டுவீட் செய்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago