2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

லோர்ட்ஸில் ஆமிருக்கு எதிர்ப்பு?

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 07 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் ஆமிருக்கு, கிரிக்கெட்டின் பழமையான மைதானமான லோர்ட்ஸில் எதிர்ப்பு வெளியிடப்படும் என்றவான கருத்துக்களை இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் புரோட் வெளிப்படுத்தியுள்ளார்.

2010ஆம் ஆண்டு லோர்ட்ஸில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு, ஐந்து வருடம் தடை விதிக்கப்பட்டு, தற்போது சர்வதேசப் போட்டிகளுக்கு திரும்பியுள்ள மொஹம்மட் ஆமிர், இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையிலேயே மேற்குறித்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

மேற்குறிப்பிட்ட ஸ்பொட் பிக்ஸிங் இடம்பெற்ற போட்டியிலேயே, தான் தற்போதுவரை கொண்டுள்ள ஒரேயொரு டெஸ்ட் சதத்தைக் கொண்டுள்ள புரோட், அந்தப் போட்டியின் முடிவானது பெறுமதியில்லாமற் செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் ஸ்பொட் பிக்ஸிங்கை மேற்கொண்ட வீரர்களை நோக்கி தவறான அபிப்பிராயமோ அல்லது எதிர்மறையான எண்ணமோ இல்லையென்றும், ரசிகர்கள் வேறுவிதமாக இருக்கலாம். லோர்ட்ஸின் மிகுந்த ஆர்வமுடைய ரசிகர்களுக்கு, சொந்த மனம் இருக்கின்றது என புரோட் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .