Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில் லியானல் மெஸ்ஸி, தனது 500ஆவது கோலைப் பெற்றிருந்தாலும் 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக லா லிகா தொடரில் பார்சிலோனா தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைத் தளுவியது.
பார்சிலோனா, வலென்சியா ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 1-2 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்தது. இப்போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 76 புள்ளிகளுடன் பார்சிலோனா முன்னிலை வகிக்கின்றது. இரண்டாமிடத்தில் அதே புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட்டும் மூன்றாமிடத்தில் 75 புள்ளிகளுடன் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago