2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

லா லிகாத் தொடர்: ரியல் மட்ரிட், பார்சிலோனா வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகாத் தொடரின், கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற போட்டிகளில், ரியல் மட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

ரியல் மட்ரிட், கிரெனடா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் ரியல் மட்ரிட் வெற்றி பெற்றது. ரியல் மட்ரிட் சார்பாக, போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் கரீம் பென்ஸீமாவும் போட்டியின் 85ஆவது நிமிடத்தில் லூகா மொட்ரிக்கும் கோல்களைப் பெற்றிருந்ததோடு, கிரெனடா அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசெஃப் எல்-அரபி பெற்றிருந்தார்.

இதேவேளை, பார்சிலோனா, லெவண்டி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றிருந்தது. பார்சிலோனா சார்பாக, போட்டியின் இறுதி நிமிடங்களில் லூயிஸ் சுவரேஸ் ஒரு கோலினைப் பெற்றிருந்ததோடு மற்றொரு கோல், முன்னர் ‘ஒவ்ண்’ கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .