Shanmugan Murugavel / 2016 மே 15 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த லா லிகா தொடரின் பட்டத்தை பார்சிலோனா கைப்பற்றியுள்ளது. பரமவைரி அணியான றியல் மட்ரிட்டுடன் தொடரின் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை (14) வரை பட்டத்துக்காக இழுபறியில் இருந்த பார்சிலோனா அணி, கிரனடா அணியைத் தோற்கடித்ததன் மூலம் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கிரனடா அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட மூன்று கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் பெற்றிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி லா லிகா புள்ளிகள் தரவரிசையில் ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்துடன் முன்னிலை வகித்த பார்சிலோனா, அதன் பின்னர், ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற எல் கிளாசிகோவில் றியல் மட்ரிட்டிடம் தோல்வியடைந்ததன் மூலம் 39 போட்டிகளில் பெற்று வந்த தொடர் வெற்றிகளை பறி கொடுத்ததுடன் அடுத்த சில நாட்களில் சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேறியதோடு லா லிகாவிலும் நிச்சயமற்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளிலும் 24 கோல்களைப் பெற்று எந்தவொரு கோலையும் வாங்காது வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
மேற்கூறப்பட்ட பார்சிலோனாவின் இறுதி 5 போட்டிகளிலும் 14 கோல்களைப் பெற்ற லூயிஸ் சுவாரஸ், மொத்தமாக இந்தப் பருவகால லா லிகாவில் 40 கோல்களைப் பெற்று, இப்பருவகால லா லிகாவில் அதிகமான கோல்களைப் பெற்றவர்களில் 35 கோல்களைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ள றியல் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட ஐந்து கோல்கள் அதிகமாகப் பெற்று, லா லிகா பருவகாலமொன்றில் அதிக கோல்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தங்கப் பாதணி விருதான பிச்சிச்சியை வென்றார். தவிர, லா லிகா பருவகாலமொன்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி தவிர அதிகமாக கோல் பெற்றவராக சுவாரஸ் மாறியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸிக்கு பின்னர் பிச்சிச்சி விருதைப் பெறும் முதலாவது வீரராக சுவாரஸ் மாறியுள்ளார். இந்த பிச்சிச்சி விருதை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்னாள் வீரரான டியகோ போர்லன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா மூன்று தடவைகள் வென்றுள்ளனர்.
இதேவேளை, இப்பருவகால லா லிகாவில் மெஸ்ஸி பெற்ற 26, நேமர் பெற்ற 24இனை சேர்த்து ‘எம்.எஸ்.என்’ எனப்படும் மெஸ்ஸி, சுவாரஸ், நேமர் கூட்டணி, இப்பருவகாலத்தில் பார்சிலோனா பெற்ற 112 கோல்களில் 90ஐ பெற்றுள்ளது.
1929ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லா லிகா தொடரை 23 தடவை கைப்பற்றியுள்ள பார்சிலோனா, மெஸ்ஸி, தற்போதைய அணித்தலைவர் இனியஸ்டா அணிக்கு வந்த பின்னர் 2004-05 பருவாகால வெற்றியுடன் தொடங்கி எட்டு தடவைகள் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், றியல் மட்ரிட், 32 தடவைகள் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
தொடரின் பட்டத்தை பார்சிலோனா கைப்பற்றியுள்ளது. பரமவைரி அணியான றியல் மட்ரிட்டுடன் தொடரின் இறுதி நாளான கடந்த சனிக்கிழமை (14) வரை பட்டத்துக்காக இழுபறியில் இருந்த பார்சிலோனா அணி, கிரனடா அணியைத் தோற்கடித்ததன் மூலம் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கிரனடா அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட மூன்று கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் பெற்றிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி லா லிகா புள்ளிகள் தரவரிசையில் ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்துடன் முன்னிலை வகித்த பார்சிலோனா, அதன் பின்னர், ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற எல் கிளாசிகோவில் றியல் மட்ரிட்டிடம் தோல்வியடைந்ததன் மூலம் 39 போட்டிகளில் பெற்று வந்த தொடர் வெற்றிகளை பறி கொடுத்ததுடன் அடுத்த சில நாட்களில் சம்பியன்ஸ் லீக்கிலிருந்து வெளியேறியதோடு லா லிகாவிலும் நிச்சயமற்ற ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளிலும் 24 கோல்களைப் பெற்று எந்தவொரு கோலையும் வாங்காது வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
மேற்கூறப்பட்ட பார்சிலோனாவின் இறுதி 5 போட்டிகளிலும் 14 கோல்களைப் பெற்ற லூயிஸ் சுவாரஸ், மொத்தமாக இந்தப் பருவகால லா லிகாவில் 40 கோல்களைப் பெற்று, இப்பருவகால லா லிகாவில் அதிகமான கோல்களைப் பெற்றவர்களில் 35 கோல்களைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ள றியல் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட ஐந்து கோல்கள் அதிகமாகப் பெற்று, லா லிகா பருவகாலமொன்றில் அதிக கோல்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தங்கப் பாதணி விருதான பிச்சிச்சியை வென்றார். தவிர, லா லிகா பருவகாலமொன்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி தவிர அதிகமாக கோல் பெற்றவராக சுவாரஸ் மாறியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸிக்கு பின்னர் பிச்சிச்சி விருதைப் பெறும் முதலாவது வீரராக சுவாரஸ் மாறியுள்ளார். இந்த பிச்சிச்சி விருதை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்னாள் வீரரான டியகோ போர்லன், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி ஆகியோர் தலா மூன்று தடவைகள் வென்றுள்ளனர்.
இதேவேளை, இப்பருவகால லா லிகாவில் மெஸ்ஸி பெற்ற 26, நேமர் பெற்ற 24இனை சேர்த்து ‘எம்.எஸ்.என்’ எனப்படும் மெஸ்ஸி, சுவாரஸ், நேமர் கூட்டணி, இப்பருவகாலத்தில் பார்சிலோனா பெற்ற 112 கோல்களில் 90ஐ பெற்றுள்ளது.
1929ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லா லிகா தொடரை 23 தடவை கைப்பற்றியுள்ள பார்சிலோனா, மெஸ்ஸி, தற்போதைய அணித்தலைவர் இனியஸ்டா அணிக்கு வந்த பின்னர் 2004-05 பருவாகால வெற்றியுடன் தொடங்கி எட்டு தடவைகள் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், றியல் மட்ரிட், 32 தடவைகள் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .