Shanmugan Murugavel / 2016 மார்ச் 07 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற போட்டிகளில் லிவர்பூல், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இதில், லிவர்பூல், கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பாக ரொபேர்டோ பேர்மின்ஹோ 72ஆவது நிமிடத்திலும் போட்டியின் இறுதி நிமிடத்தில் கிறிஸ்டியான் பென்டீகீயும் கோல்களைப் பெற்றனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 44 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் ஏழாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், நான்காமிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றியை விட ஆறு புள்ளிகளே குறைவாகப் பெற்றுள்ளது.
இதேவேளை, மன்செஸ்டர் யுனைட்டெட், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் ஜுவான் மாத்தாவுக்கு இரண்டு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால், சிவப்பு அட்டை காட்டப்பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இந்தப் போட்டியின் முடிவில் 47 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கின்றது.
23 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago