2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

லிவர்பூலிலிருந்து வெளியேறும் வான் டிஜிக்?

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக் எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று தெரியாது எனக் கூறியுள்ளார்.

பின்களவீரரான வான் டிஜிக்கின் லிவர்பூலுடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்ற நிலையில் ஒப்பந்த நீடிப்பு தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடும்போதே மேற்படி விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செளதாம்டனிலிருந்து 2018ஆம் ஆண்டு லிவர்பூலில் இணைந்த 33 வயதான வான் டிஜிக், பிறீமியர் லீக், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை லிவர்பூல் வெல்வதற்கு உதவியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .