Shanmugan Murugavel / 2016 ஜூன் 12 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பங்குகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி, 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சென். கிற்ஸ், வோணர் பார்க்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி சார்பாக 2ஆவது விக்கெட்டுக்காக 140 ஓட்டங்களை, டேவிட் வோணரும் உஸ்மான் கவாஜாவும் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர் 109 (120), உஸ்மான் கவாஜா 59 (71), ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 52 (49), மத்தியூ வேட் 24 (14) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களுடனும் பின்னர் 37.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களுடனும் பலமாகக் காணப்பட்ட போதிலும், இறுதி 7 விக்கெட்டுகளும் 42 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில் பப் டு பிளெஸிஸ் 63 (76), ஹஷிம் அம்லா 60 (64), ஜே.பி டுமினி 41 (39), ஏபி டி வில்லியர்ஸ் 39 (32) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மிற்சல் ஸ்டார்க், அடம் ஸாம்பா, ஜொஷ் ஹேஸல்வூட் மூவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, டேவிட் வோணர் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .