2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ்: 4ஆவது சுற்றுக்கு செரினா முன்னேற்றம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 04 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 7ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில், தரப்படுத்தப்பட்ட வீர, வீராங்கனைகள் சிலர், தோல்வியடைந்து வெளியேறினர்.

139 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட விம்பிள்டன் தொடரில் நடுப்பகுதியிலுள்ள ஞாயிற்றுக்கிழமையில் போட்டிகள் இடம்பெற்றமை, இதுவே நான்காவது தடவையாகும்.
இதில், உலகின் முதல்நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், ஜேர்மனியின் அன்னிக்கா பெக்-ஐ எதிர்கொண்டு, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வென்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

6ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் றொபேர்ட்டா வின்சி, 27ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கொக்கோ வன்டெவெகேயிடம், 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். 11ஆம் நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் திமியா பக்ஸின்ஸ்கி, 21ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்தசியா பவ்லியுசெங்கோவாவிடம் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 24ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்பொரா ஸ்ட்ரைகோவா, ரஷ்யாவின் எகடெரினா மகரோவாவிடம் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், 11ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ வில்பிரட் சொங்கா, 18ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜோன் இஸ்னெரை எதிர்கொண்டு, 6-7, 3-6, 7-6, 6-2, 19-17 என்ற கடுமையான போட்டிக்குப் பின்னர் வெற்றிபெற்றார். 15ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், 22ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் பெலிசியானோ லோபெஷை, 6-3, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .