2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு தலா 2 மில்லியன் பவுண்ட்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு இடம்பெறவுள்ள விம்பிள்டன் போட்டிகளில் ஒற்றையர் போட்டிகளில் சம்பியன் பட்டம் பெறும் ஆண், பெண் போட்டியாளர்களுக்கு, தலா 2 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் (2.9 மில்லியன் அமெரிக்க டொலர்) பணப்பரிசாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றையர் சம்பியன்களுக்கான பணப்பரிசு அதிகரிப்படுவது தவிர, ஒட்டுமொத்தப் பரிசுப்பணமும் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 28.1 மில்லியன் பவுண்ட்ஸ், இம்முறை பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

கடந்தாண்டு சம்பியன் பட்டம் வென்ற நொவக் ஜோக்கோவிச்சும் செரினா வில்லியம்ஸூம், தலா 1.88 மில்லியன் பவுண்ட்ஸ்களை வென்றிருந்தனர்.

தவிர, இம்முறை இடம்பெறவுள்ள விம்பிள்டன் போட்டிகளில், ஊக்கமருந்துப் பாவனை தொடர்பாக அதிகரித்த கண்காணிப்புக் காணப்படுமெனவும் அறிவிக்கப்படுகிறது. முன்னாள் சம்பியனான மரியா ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பாவனை காரணமாக இவ்வாண்டு தடைசெய்யப்பட்ட நிலையிலேயே, இம்முறை இக்கண்காணிப்பு அதிகரிக்கப்படவுள்ளது.

விம்பிள்டன் போட்டிகளில் பரிசுப்பணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், கிரான்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிகரித்த பரிசுப்பணத்தை வழங்கும் தொடராக, ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரே காணப்படுகிறது. ஒற்றையர் போட்டிகளின் சம்பியன்களுக்குத் தலா 3.3 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்படுவதோடு, ஒட்டுமொத்தமாக 42.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .