Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 17 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்துக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான அபுதாபியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 523 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷோய்ப் மலிக் 245, அசாட் ஷாஃபிக் 107, மொஹமட் ஹபீஸ் 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 598 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதில் அணித்தலைவர் அலஸ்டைர் குக் 263 ஓட்டங்களையும், ஜோ ரூட் 85 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வகாப் ரியாஸ் 3, ஷோய்ப் மலிக், இம்ரான் கான் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பின்னர் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் மிஸ்பா உல் ஹக் 51 ஓட்டங்களையும், யூனிஸ் கான் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அடில் ரஷீத் 5 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், மொயின் அலி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
99 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி போதிய வெளிச்சமின்மையால் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது 4 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. களத்தில் ஜோ ரூட் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சுல்பிக்கார் பாபர், ஷோய்ப் மலிக் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் நாயகனாக இங்கிலாந்து அணியின் அலஸ்ட்டீர் குக் தெரிவானார்.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026