Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெறுவது குறித்து, டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நம்பிக்கையிருந்ததாக, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குயின்டன் டீ கொக் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில், பெங்களூர் அணி 250 ஓட்டங்களைப் பெறும் நிலை காணப்பட்ட நிலையில், 192 என்ற இலக்கை அடைவது குறித்து நம்பிக்கை இருந்ததாக, அவர் தெரிவித்தார்.
குறித்த போட்டியில், விராத் கோலி, ஏ.பி டி வில்லியர்ஸ் ஆகியோரின் அரைச்சதங்கள், ஷேன் வொற்சனின் அதிரடி ஆகியவற்றின் துணையுடன், பெங்களூர் அணி 191 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், இவ்வாண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் முதலாவது சதத்தை விளாசிய குயின்டன் டீ கொக், 51 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்து, டெல்லி அணி வெற்றிபெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.
முன்னதாக, கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கும் றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பூனே அணி, 152 ஓட்டங்களைப் பெற, பஞ்சாப் அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்திருந்தது.
29 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago