Shanmugan Murugavel / 2016 ஜூன் 24 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்றியமைக்கப்பட்ட பந்துவீச்சுபாணியின் பின்னர், பிறீத்தோறியா பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 10ஆம் திகதி மீண்டும் இடம்பெற்ற சோதனையின் பின்னர், சிம்பாப்வேயின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயன் விற்றோரியின் பந்துவீச்சுபாணியானது, விதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
மீள் சோதனையின்போது, விற்றோரியின் அனைத்து வகையான பந்துவீச்சுகளிலும் அவரின் முழங்கை நீட்சியானது 15 பாகைக்குள்ளேயே இருந்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் உலகளாவிய உள்ளூர் தொடர்களிலும் பந்துவீசலை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி 10ஆம் திகதி, குளுநாவில், பங்களாதேஷூக்கெதிராக இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், விற்றோரியின் பந்துவீச்சுபாணி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, பெப்ரவரியில் அவர் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட 26 வயதான விற்றோரி, நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் 19 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 11 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் சிம்பாப்வேக்காக ஆடியுள்ளார்.
30 minute ago
35 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
3 hours ago
5 hours ago