Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்டஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவது போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, வெள்ளையடிப்பைத் தவிர்த்துக் கொண்டது.
வேல்ஸின் தலைநகரமான கார்டிஃப்-இல் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 41.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட அவ்வணி, இறுதி நேரத்தில் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியது.
துடுப்பாட்டத்தில் ஜேஸன் றோய் 87 (89), பென் ஸ்டோக்ஸ் 75 (76), ஜொனி பெயர்ஸ்டோ 33 (36) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஹஸன் அலி 4, மொஹமட் ஆமிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
303 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, பின்னர் சப்ராஸ் அஹ்ட்டும் ஷொய்ப் மலிக்கும் இணைந்து பகிர்ந்த 163 ஓட்ட இணைப்பாட்டத்தினால் பலம்பெற்றது. அவர்களிருவரும் குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்த பின்னர், 42.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களுடன் அவ்வணி காணப்பட்ட போதிலும், அவ்வணி இறுதியில் வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் சப்ராஸ் அஹ்மட் 90 (73), ஷொய்ப் மலிக் 77 (80), மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 34 (34), அஸார் அலி 33 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மார்க் வூட், லியம் டவ்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக சப்ராஸ் அஹ்மட்டும் தொடரின் நாயகனாக ஜோ றூட்டும் தெரிவாகினர்.
இந்தத் தொடரை, இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago