Shanmugan Murugavel / 2021 ஜூலை 28 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் பின்களவீரரான ரஃபெயெல் வரானுக்காக அக்கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கியுள்ளதாக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
41 மில்லியன் யூரோக்களையும், மேலதிக கொடுப்பனவாக 8.2 மில்லியன் யூரோக்களையும் 28 வயதான வரானுக்காக யுனைட்டெட் செலுத்தவுள்ளது.
மருத்துவப் பரிசோதனையைடுத்து, ஓராண்டு மேலதிகத் தெரிவு ஒன்றுடன் நான்காண்டு ஒப்பந்தம் ஒன்றில் வரான் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டில் றியல் மட்ரிட்டில் இணைந்த வரான், நான்கு சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், மூன்று லா லிகா பட்டங்களையும் வென்றிருந்தார்.
8 minute ago
36 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
1 hours ago
3 hours ago