Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 17 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் லிவர்பூலின் எம் அன்ட் எஸ் பாங்க் அரங்கத்தில் இடம்பெற்றுவரும் 15ஆவது வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில், நேற்று இடம்பெற்ற சமோவாவுடனான குழு ஈ போட்டியில் இலங்கை தோற்றது.
இப்போட்டியின் முதற்காற்பகுதியில், தரவரிசையில் 14ஆம் இடத்திலிருக்கும் சமோவாவுக்கெதிராக 18ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை 17-13 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றது.
எவ்வாறெனினும், இரண்டாவது காற்பகுதியில் தாக்குதலிலும், தடுப்பாட்டத்திலும் மீண்டெழுந்த சமோவா 19 புள்ளிகளைச் சேர்த்த நிலையில், இலங்கை 10 புள்ளிகளையே சேர்த்த நிலையில் போட்டியின் அரைப்பகுதியில் 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் சமோவா முன்னிலை பெற்றது.
இந்நிலையில், சிங்கப்பூருகெதிரான போட்டியில் இலங்கைக்கு சாதகத்தை வழங்கிய நீண்ட தூர பரிமாற்றங்கள் இப்போட்டியில் சமோவாவின் தடுப்பாளர்களின் கைகளில் வீழ்ந்ததோடு, உடலியல் ரீதியான பலத்தையும் சமோவா பயன்படுத்திய நிலையில், மூன்றாவது காற்பகுதியில் அது 17 புள்ளிகளைப் பெற்ற நிலையில், 13 புள்ளிகளையே இலங்கை பெற்ற நிலையில், இக்காற்பகுதி முடிவில் 49-40 என்ற புள்ளிகள் சமோவா முன்னிலையில் இருந்தது.
நான்காவது காற்பகுதியில் கடுமையாக போராடியபோதும், இப்போட்டி முழுவதும் இலங்கைக்கு சவாலாக விளங்கிய இலங்கையின் கோல் எய்பரவரான தர்ஜினி சிவலிங்கத்தைக் காத்துக்கொண்டிருந்த போட்டியின் நாயகியாக தெரிவான லெனொரா மிஸாவால் தடுக்கப்பட்ட நிலையில், 15 புள்ளிகளையே இலங்கை பெற, 16 புள்ளிகளைப் பெற்ற சமோவா இறுதியில் 65-55 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
இப்போட்டியில் இலங்கை தோற்றிருந்தாலும் தனது 58 புள்ளிகள் பெறுவதற்கான வாய்ப்புகளில் 52 புள்ளிகளைப் பெற்றிருந்த தர்ஜினி சிவலிங்கம் மொத்தமாக இந்த உலகக் கிண்ணத்தில் 235 புள்ளிகளைப் பெற்று, தற்போது வரை இவ்வுலகக் கிண்ணத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவராகத் திகழ்கின்றார்
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago