Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

றொட்டர்டாம் பகிரங்க டென்னிஸ் தொடரில் பிரான்ஸின் கயேல் மொன்பில்ஸ் சம்பியனானார்.
நெதர்லாந்தின் றொட்டர்டாமில் இடம்பெற்றுவந்த இத்தொடரின் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவை வென்றே கயேல் மொன்பில்ஸ் சம்பியனானார்.
இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், உலகின் ஆறாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியை, ஸ்டான் வவ்றிங்காவும் உலகின் 15ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டனில் மெட்வெடேவை கயேல் மொன்பில்ஸும் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.
இறுதிப் போட்டியின் முதலாவது செட்டை 6-3 என கயேல் மொன்பில்ஸ் கைப்பற்றியபோதும், இரண்டாவது செட்டை 6-1 என ஸ்டான் வவ்றிங்கா கைப்பற்றினார். எனினும், மூன்றாவது செட்டை 6-2 எனக் கைப்பற்றிய கயேல் மொன்பில்ஸ் சம்பியனானார்.
இத்தொடரில் சம்பியனானதன் மூலம், 33ஆம் இடத்தில் இத்தொடரை ஆரம்பித்த கயேல் மொன்பில்ஸ், 10 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 23ஆம் இடத்தை அடைந்துள்ளார். 68ஆம் இடத்திலிருந்து இத்தொடரை ஆரம்பித்த ஸ்டான் வவ்றிங்கா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் 27 இடங்கள் முன்னேறி 41ஆம் இடத்தை தரவரிசையில் அடைந்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago