Kogilavani / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் சிற்றி அணியின் றஹீம் ஸ்டேர்லிங்கைக் கொடுத்து, ஆர்சனல் அணியின் அலெக்ஸிஸ் சான்செஸை வாங்குவதற்கு, மன்செஸ்டர் சிற்றி அணி தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டேர்லிங்குக்கு மேலதிகமாக, பணமும் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் வீரர்களின் பரிமாற்றக் காலம், வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னர், இந்தப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முயலப்படுகிறது.
சான்செஸை வாங்க வேண்டுமென, சிற்றியின் முகாமையாளர் பெப் கார்டியொலோ, தொடர்ச்சியாக முயன்றுவந்த நிலையிலேயே, தற்போது இறுதிக் கட்டமாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
22 வயதான ஸ்டேர்லிங், இப்பருவகாலத்தில், இதுவரை ஒரு போட்டியில் மாத்திரமே சிற்றி அணியின் ஆரம்ப வரிசையில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026