2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வீல்றியலிடம் தோற்ற ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான வீல்றியலுடனான தமது மைதானத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற சிநேகபூர்வமான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனல் 2-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

ஆர்சனல் சார்பாக கிறிஸ்டியன் நொர்கார்ட், மார்டின் ஒடெகார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வீல்றியல் சார்பாக நிக்கொலஸ் பெப்பே, எட்டா எயொங்க், அர்னோட் டஞ்சுமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை தமது மைதானத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான அஸ்தன் வில்லா வென்றது. வில்லா சார்பாக எமிலியானோ புயென்டியா, ஜேக்கப் றாம்சி, ஒலி வட்கின்ஸ், டொன்யெல் மலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .