Freelancer / 2023 நவம்பர் 07 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலிய குரான் பிறீயானது நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நிலையில் பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
இதேவேளை பந்தயத்தை ஆறாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த அஸ்தன் மார்டின் அணியின் பெர்ணாண்டோ அலோன்ஸோ மூன்றாமிடத்தைப் பெற்றார்.
இந்நிலையில் இப்பந்தய முடிவில் இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தான் சம்பியனானவதை ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ள நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் 524 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றார். இரண்டாமிடத்தில் 258 புள்ளிகளுடன் வெர்ஸ்டப்பனின் சக றெட் புல் அணி ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் காணப்படுகின்றார். மூன்றாமிடத்தில் மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் 226 புள்ளிகளுடன் காணப்படுகின்றார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026