Shanmugan Murugavel / 2021 நவம்பர் 15 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் சா போலோ குரான் பிறீயில், றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தி நடப்பு போர்மியுலா வண் சம்பியனான லூயிஸ் ஹமில்டன் வென்றார்.
கார்களில் மாற்றத்தை மேற்கொண்டமை காரணமாக 10ஆம் இடத்திலிருந்தே நேற்றிரவு பந்தயத்தை ஹமில்டன் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பிரித்தானியாவின் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணி ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அந்தவகையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் புள்ளிகள் பட்டியலில் 332.5 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் உள்ள நிலையில், 318.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஹமில்டன் உள்ளதோடு, 203 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் பின்லாந்தின் போத்தாஸ் காணப்படுகின்றனர்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago