Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்த குறித்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், தமது முதலாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 163, அணித்தலைவர் மொமினுல் ஹக் 127, தமிம் இக்பால் 90, முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 68, லிட்டன் தாஸ் 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், விஷ்வ பெர்ணான்டோ 4, சுரங்க லக்மால், லஹிரு குமார, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 8 விக்கெட்டுகளை இழந்து 648 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இன்று இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 244, தனஞ்சய டி சில்வா 166, லஹிரு திரிமான்ன 58, வனிடு ஹஸரங்க 43 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தஸ்கின் அஹ்மட் 3, தஜியுல் இஸ்லாம் 2, மெஹிடி ஹஸன் மிராஸ், எபொடொட் ஹொஸைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 100 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையுடன் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்திருந்தது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் கைப்பற்றியிருந்தார்.
3 hours ago
6 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
26 Jan 2026