Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 15 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20, 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டிகளின்போது சுப்பர் ஓவர் சமநிலையாகும் பட்சத்தில் இனி வெற்றியைத் தீர்மானிப்பதாக நான்கு, ஆறு ஓட்ட கணக்கு விளங்கப் போவதில்லை.
அதற்கு மாறாக இனி இருபதுக்கு – 20, 50 ஓவர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டிகளின் சுப்பர் ஓவர் சமநிலையாகும் பட்சத்தில், வெற்றியாளர் கிடைக்கும் வரையில் மீண்டும் மீண்டும் சுப்பர் ஓவர் நடைபெறவுள்ளது.
இதேவேளை, எதிர்கால இருபதுக்கு – 20, 50 ஓவர் உலகக் கிண்ண லீக் போட்டிகள் சமநிலையாகும் பட்சத்திலும் இனி சுப்பர் ஓவர் பயன்படுத்தப்படவுள்ளதுடன், அப்போது சுப்பர் ஓவர் சமநிலையாகும் பட்சத்தில் அப்போட்டி சமநிலையில் முடிந்ததாகக் கொள்ளப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்திலேயே மேற்குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத் தலையீடு காரணமாக சிம்பாப்வே கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்ட ஏறத்தாழ மூன்று மாதங்களில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவ நாடொன்றாக சிம்பாப்வே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதில் சிம்பாப்வேயை ஏற்கெனவே நைஜீரியா பிரதியிட்டுள்ள நிலையில் குறித்த போட்டிகளில் சிம்பாப்வே பங்குபற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசாங்கத் தலையீடு காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் 2016ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்த நேபாளமும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
34 minute ago
04 Jul 2025