2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் தோற்றதைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது.

ஏழு போட்டிகளில் விளையாடி இதுவரையில் ஒரு போட்டியிலேயே வென்றுள்ள இங்கிலாந்து இரண்டு புள்ளிகளுடனுள்ள நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாலும் ஆறு புள்ளிகளையே பெற முடியும் என்ற நிலையில், புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்திலுள்ள நியூசிலாந்து எட்டுப் புள்ளிகளுடன் காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

அவுஸ்திரேலியா: 286/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 71 (83), கமரொன் கிறீன் 47 (52), ஸ்டீவன் ஸ்மித் 44 (52), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 35 (32), அடம் ஸாம்பா 29 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 4/54, அடில் ரஷீட் 2/38, டேவிட் வில்லி 1/48)

இங்கிலாந்து: 253/10 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 64 (90), டேவிட் மலன் 50 (64), மொயின் அலி 42 (43), கிறிஸ் வோக்ஸ் 32 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 3/21, பற் கமின்ஸ் 2/49, ஜொஷ் ஹேசில்வூட் 2/49, மிற்செல் ஸ்டார்க் 2/66)

போட்டியின் நாயகன்: அடம் ஸாம்பா

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற மற்றைய போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வென்றிருந்தது.

இதேவேளை டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பங்களாதேஷை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .