Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனடா பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், நான்காம் நிலை வீரரான டெய்லர் பிறிட்ஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் கரென் காஞ்சனோவ்வை எதிர்கொண்ட ஜேர்மனியின் ஸவ்ரேவ், 3-6, 6-4, 6-7 (4-6) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை தனது அரையிறுதிப் போட்டியில் ஏழாம் நிலை வீரரான பென் ஷெல்டனை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பிறிட்ஸ், 4-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தனது அரையிறுதிப் போட்டியில் கஸக்ஸ்தானின் எலெனா றைபகினாவை 1-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று கனடாவின் விக்டோரியா எம்போக்கோ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதேவேளை டென்மார்க்கின் கிளாரா டெளசனை 6-2, 7-6 (9-7) என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு ஜப்பானின் நயோமி ஒஸாகா தகுதி பெற்றுள்ளார்.
18 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
42 minute ago