Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெட்ஸ்க்குமிடையிலான குழு பி போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்தே தொடரிலிருந்து இன்டர் மிலன் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பொரூசியா மொச்சென்கிளெட்பாவுக்குமிடையிலான இன்னொரு குழு பி போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற றியல் மட்ரிட், விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கரிம் பென்ஸீமா பெற்றார்.
இந்நிலையில், இக்குழு பியில் மொச்சென்கிளெட்பாவும், டொனெஸ்டுக்கும் தலா எட்டுப் புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டிகளில் மேம்பட்ட முடிவு காரணமாக மொச்சென்கிளெட்பாவும் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது.
இதேவேளை, ஒஸ்திரியக் கழகமான ஆர்.பி சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுக்குமிடையிலான குழு ஏ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அத்லெட்டிகோ விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது. அத்லெட்டிகோ சார்பாக, மரியோ ஹெர்மொஸோ, யனிக் கராஸ்கோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற இன்னொரு இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டா விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற, அஜக்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை லூயிஸ் முரியெல் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
55 minute ago