Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றது.
மியூனிச் சார்பாக, கிங்ஸ்கி கோமன் இரண்டு கோல்களையும், தோமஸ் மல்லர், ஜமால் முஸியாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வொல்வ்ஸ்பேர்க் சார்பாக, ஜகும் கமின்ஸ்கி, மத்தியாஸ் ஸ்வென்பேர்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
புண்டெஸ்லிகா புள்ளிகள் பட்டியலில் 40 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மியூனிச் உள்ளது. 39 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் யூனியன் பேர்லினும், 37 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பொரூசியா டொட்டமுண்டும், 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்குமுள்ளன.
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago