Shanmugan Murugavel / 2021 ஜனவரி 04 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்குக்குமிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் டொட்டமுண்ட் வென்றது.
டொட்டமுண்ட் சார்பாக, மனுவல் அகஞ்சி, ஜடோன் சாஞ்சோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 33 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 31 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும், 28 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பயேர் லெவர்குசனும், 25 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் டொட்டமுண்டும் காணப்படுகின்றன.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago