2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியாக நீக்கம்

Editorial   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி20 உலகக்கோப்பை தொடர் எதிர்வரும்16 ஆம் திகதி அஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான வீரர்களை, போட்டியில் பங்குபெறும் நாடுகள் அறிவித்துள்ளதோடு, போட்டிகளில் விளையாடுவதற்காக அஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் டி20 உலகக்கோப்பைக்கான் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், போட்டியில் பங்கேற்க அஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய விமானத்தை தவறவிட்டார். இதன் காரணமாக் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெஸ்ட் கிரிக்கெட் இயக்குநர் ஜிம்மி ஆடம்ஸ் கூறுகையில், "குடும்பக் காரணங்களுக்காக ஹெட்மயரின் விமான பயணம் சனிக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றினோம். ஆனால், அவர் திங்களன்று புறப்படும் விமானத்தையும் பிடிக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல இயலாது என்று தெரிவித்துவிட்டார்.

மேலும் அவர் அஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வதில் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் இருந்தால் வேறு வழியில்லாமல் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டோம் என்று தெரிவித்தார். ஹெட்மயருக்கு பதிலாக 34 வயதான ஷமர் ப்ரூக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்,

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .