Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்மியுலா வண் காரோட்டப் பந்தயங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட ஜேர்மனிய மைக்கல் ஷுமாக்கரின் சாதனையை பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் முறியடித்துள்ளார்.
இன்று நடைபெற்ற போர்த்துக்கல் குறான் பிறீயில் வென்றமையைத் தொடர்ந்தே ஷுமாக்கரின் 91 வெற்றிகள் என்ற சாதனையை முறியடித்து 92ஆவது வெற்றியை மெர்சிடீஸ் அணியின் ஹமில்டன் பெற்றார்.
இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஹமில்டன், முதலிரண்டு சுற்றுக்கள் முடிவில் மக்கலரென் அணியின் மெக்ஸிக்க ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸ், சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸின் பின்னால் காணப்பட்டிருந்தார்.
எனினும், முதலில் போத்தாஸும், ஹமில்டனும் சைன்ஸை முந்தியதோடு, 20ஆவது சுற்றில் போத்தாஸை ஹமில்டன் முந்தி அதிலிருந்து பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தி ஹமில்டன் வென்றார்.
இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தை போத்தாஸும், மூன்றாமிடத்தை றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனும் பெற்றனர்.
இந்நிலையில், குறித்த வெற்றியுடன் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் புள்ளிகள் பட்டியலில் 256 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஹமில்டன் காணப்படுகின்ற நிலையில், அவரை விட 77 புள்ளிகள் குறைவாக 179 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் போத்தாஸ் காணப்படுகின்றார். மூன்றாமிடத்தில் 162 புள்ளிகளுடன் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
15 minute ago
20 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
2 hours ago
5 hours ago