2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஸல்டான் இப்ராஹிமோவிக் மேலுமொரு சாதனை

Shanmugan Murugavel   / 2016 மே 15 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணிக்காக தனது இறுதி லீக் போட்டியில், நன்டேஸ் அணிக்கு எதிராக விளையாடிய அவ்வணியின் நட்சத்திர வீரர் ஸல்டான் இப்ராஹிமோவிக் மேலுமொரு சாதனையைப் படைத்துள்ளார்.

4-0 என்ற கோல்கணக்கில் பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணி வெற்றி பெற்ற இப்போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்றிருந்த ஸல்டான் இப்ராஹிமோவிக், இவற்றுடன் சேர்த்து, இந்த லீக் பருவகாலத்தில் 38 கோல்களைப் பெற்று, அவ்வணி சார்பாக லீக் பருவகாலமொன்றில் அதிக கோல்களை 1977-78 பருவகாலத்தில்  கார்லோஸ் பியாஞ்சியின் 37 கோல் சாதனையை முறியடித்தார்.

மர்செய்லி அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள பிரஞ்சுக் கிண்ண இறுதிப் போட்டியுடன் பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணியிலிருந்து விலகும் ஸல்டான் இப்ராஹிமோவிக்காக, அவரின் சீருடை இலக்கமான 10ஐ குறிக்கும் பொருட்டு 10ஆவது நிமிடத்தில் போட்டி நிறுத்தப்பட்டு, ரசிகர்கள், எழுந்து நின்று மரியாதை செலுதியிருந்தனர்.

34 வயதான சுவீடன் நாட்டு வீரரான ஸல்டான் இப்ராஹிமோவிக், பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் அணிக்காக நான்கு வருடங்களில் 179 போட்டிகளில் பங்குபற்றி 154 கோல்களைப் பெற்றிருந்ததோடு, அவர் இருந்த ஒவ்வொரு பருவகாலங்களிலும் லீக் பட்டத்தை பரிஸ் செய்ண்ட்-ஜெர்மைன் வென்றிருந்தது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .