2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ஹொங் கொங் வீரருக்கு இடைக்காலத் தடை

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங் தேசிய கிரிக்கெட் அணியின் வீரரான இர்பான் அஹ்மட், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான விதிகளை மீறிய குற்றச்சாட்டில், இடைக்காலத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான நடத்தை விதிகளின் சரத்து 2.4.2ஐ மீறியமைக்காகவே, இந்த இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 'ஊழலுக்கெதிரான நடத்தை விதிகளை மீறுவதாக அமையக்கூடிய நிகழ்வுகள் அல்லது சம்பவங்களில் பங்குபற்றுவதற்கான அணுக்கங்கள் அல்லது அழைப்புகள் பற்றி, ஊழலுக்கெதிரான அமைப்பிடம் (தேவையற்ற தாமதமின்றி) அறிவித்தல்" என்பதை, இந்தச்சரத்துக் குறிப்பிடுகிறது.

இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் பேச்சாளரொருவர், இது குறித்து மேலதிக விடயங்கள், இப்போதைக்கு வெளியிடப்படாது எனத் தெரிவித்தார்.

26 வயதான இர்பான் அஹ்மட், 2008ஆம் ஆண்டு தனது அறிமுகத்தை மேற்கொண்டதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆறிலும், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் எட்டிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .