Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்கவை தக்க வைப்பதற்கான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவரைப் பிரதியீடு செய்வோர் குறித்து கவனஞ் செலுத்துவதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான தொடரின்போது தற்காலிக பயிற்சியாளராக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலிட் மஹ்மூட் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், சிம்பாப்வேயின் முன்னாள் வீரரான அன்டி பிளவர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் பங்களாதேஷின் பயிற்சியாளராவதை நிராகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு முன்னர் வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரொருவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கண்டுபிடிப்பது கடினம என எதிர்பார்க்கப்படுகிறது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026