Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள ஹமில்டன் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்குச் சாதமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அணியின் பயிற்றுநர் ஜெரோம் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி டுனேடினில் இடம்பெற்ற போதே, அதிக குளிராக இருந்ததாக வீரர்கள் முறைப்பட்டிருந்த நிலையில், ஹமில்டனில் இன்னமும் அதிகமான குளிர் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குளிரை விட, ஹமில்டன் ஆடுகளம், இலங்கை வீரர்களுக்கு இன்னமும் சவாலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளம் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜெரோம் ஜயரத்ன, 'தனக்குக் கிடைத்த தகவல்களின்படி, ஹமில்டன் ஆடுகளமானது, நேரம் செல்ல, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையும். ஆனால், நியூசிலாந்து வீரர்களுக்குச் சாதமாக அமையும் வண்ணம் இந்த ஆடுகளம், தயார் செய்யப்பட்டுள்ளதென நான் நினைக்கிறேன். அது, புரிந்துகொள்ளப்படக் கூடியது ததான்" என்றார். ஆடுகளத்தில், 18 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான புல், ஆடுகளத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆடுகளம், டுனேடினை விட அதிகளவு துள்ளியெழும் தன்மையை வழங்குமெனத் தெரிவித்த ஜயரத்ன, ஆடுகளத்தைப் பார்க்கும் போது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இலங்கையின் துடுப்பாட்டம் குறித்து அதிக கவனம் திரும்பியுள்ளது.
முதலாவது போட்டியில், இலங்கை அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. நியூசிலாந்தை விட 50.4 ஓவர்கள் அதிகமாகத் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை, அவ்வணியை விட 122 ஓட்டங்கள் குறைவாகப் பெற்றிருந்தது.
முன்னைய காலங்களில், 75 ஓவர்களை விட அதிகமாகத் துடுப்பெடுத்தாடாத நிலை காணப்பட்ட போதும், இப்போட்டியில் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடியமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், எனினும், ஓட்டங்களைப் பெறுவது குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026