2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஹாஸ் அணியால் வெளியேற்றப்பட்ட ரஷ்ய ஓட்டுநர்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 07 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனுக்குள் ரஷ்யா ஊடுருவியமை காரணமாக, ஃபோர்மியுலா வண் அணியான ஹாஸால் ரஷ்ய ஓட்டுநரான நிகிடா மஸெபின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, தமது பிரதான அனுசரணையாளரான ரஷ்ய இரசாயன நிறுவனமான உரல்கலியின் ஒப்பந்தத்தையும் ஐக்கிய அமெரிக்க அணியான ஹாஸ் இரத்துச் செய்துள்ளது.

உரல்கலியானது மஸெப்பின்ன்னின் செல்வந்தத் தந்தையான டிமித்திரியாலேயே அவரது நிறுவனமான உரல்செம்மால் ஆளப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய உதவியாளர் டிமித்ரி ஆவார்.

உக்ரேனிய ஆக்கிரமிப்பு தொடங்கிய பின்னர் டிமித்ரி, ஜனாதிபதி புட்டினைச் சந்தித்திருந்தார்.

ரஷ்ய குரான் பிறீயை போர்மியுலா வண் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X