2025 மே 03, சனிக்கிழமை

மனித பாவனைக்குதவாத உணவு பொருள் விற்ற 4 வர்த்தகர்கள் கைது

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மனித பாவனைக்குதவாத, சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் சமைத்த உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் இன்று (13) காத்தான்குடி நகரில் சுற்றி வளைக்கப்பட்டன. பேக்கரிகள் ஹோட்டல்கள் தேனீர்ச்சாலைகள் பொது சுகாதார அதிகாரிகளினால் சுற்றிவளைத்து சோதனையிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகத்தின்  ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் யு.எல்.எம்.நஸீர்தீனின் தலைமையில் இத்தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேடுதலின்போது மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதுடன் பெருமளவு பழுதடைந்த சமைத்த உணவு பொருட்களும் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்கள் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X