2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 8 நாட்களுக்கு பின்னர் கைது

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பில் வீட்டு உரிமையாளரை கத்தியால் வெட்டிவிட்டு அவ்வீட்டிலிருந்த பணம், நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் 8 நாட்களுக்கு பின்னர் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 4 பேரை பொலன்னறுவையில் வைத்து பொலிஸார் அன்றைய தினமே கைதுசெய்தனர்.

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியிலுள்ள வீடொன்றிலேயே  கடந்த சனிக்கிழமை இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. இதன்போது தங்கநகைகளும் 53,000 ரூபா பணமும் 2 மடிக்கணினிகளும் திருடப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளரை இரு கைகளிலும் தலையின் பின்பகுதியிலும் கத்தியால் வெட்டி விட்டு திருடப்பட்ட பொருட்களுடன் பிரதான சந்தேக நபர்  வெள்ளை வானில் தப்பிச்சென்றுள்ளார். அந்த பிரதான சந்தேக நபரான மாறன் என்பவரையே பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X