2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வந்தாறுமுலை மேற்கு கிராமத்தில் அனர்த் ஒத்திகை: 850 பேர் பங்கேற்பு

Kogilavani   / 2014 நவம்பர் 04 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

அனர்த்த குறைப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வந்தாறுமூலை மேற்கு கிராமத்தில் திங்கட்கிழமை (03) கிராம மட்டம் அனர்த்த ஒத்திகை நடைபெற்றது.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஹன்டிகப் இன்டர்நெசனல் எனும் அரச சார்பற்ற அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்வனர்த்த ஒத்திகை நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த  850 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

இதில் இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல், முதவுதவி மற்று இடைத்தங்கல் முகாம்களை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான பல விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தகதாகும்.

சர்வதேச அனர்த்த குறைப்பு தினம் எதிர்வரும் 13 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X