2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் 1400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ரி,லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டின் அபிவிருத்திக்காக 1400 மில்லியன் ரூபா
ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

'வறுமையற்றதோர் இலங்கை தேசம் - நிறைவான இல்லம்' திட்டத்தின் அறிவூட்டல் நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று (வெல்லாவெளி)க்கான கூட்டம் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் போரதீவுப்பற்று அபிவிருத்திக்குழுவின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்றில்; 55 வீதமானோர் வறுமை நிலையில் உள்ளனர்.

இச்செயலமர்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் 8.9 வீதமாக இருக்கும் வறுமையினை 2015ஆம் ஆண்டு முழுமையாக இல்லாமல் செய்யும் வகையில் இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் துரித வளர்ச்சிக்கு இந்த திட்டம் பெரும் பங்காற்றவுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X