2025 மே 01, வியாழக்கிழமை

போரில் மாத்திரம் கணவனை இழந்த 21,000 பெண்கள் மட்டக்களப்பில் உள்ளனர்: வி.முரளிதரன்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 28 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் மட்டும் கணவனை இழந்த 21 ஆயிரம் பெண்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படும் வகையில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமான பட்டிப்பளை மற்றும் வவுணதீவு பிரதேசங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 36 மில்லியன் ரூபா உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் பட்டிப்பளை பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • bis Wednesday, 29 January 2014 03:22 AM

    எல்லாம் உங்கட கெட்டித்தனம்தான். பிள்ளையை கிள்ளிய நீங்கள் இப்போ தொட்டிலாட்டிகுறீங்க!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .