2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சியை பூர்த்தி செய்த 405 இராணுவ வீரர்கள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


.கே.எல்.ரி.யுதாஜித்

இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவுசெய்த 405 சிங்கள,  சிங்கள, முஸ்லிம் இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வு, புணாணையிலுள்ள படைப்பிரிவின் தலைமையகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்றது. 

பயிற்சிகளை நிறைவு செய்தவர்களில் 31 தமிழ் இளைஞர்களும் 7 முஸ்லிம் இளைஞர்களும் அடங்குகின்றனர்.

நாடு பூராகவும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்கள்,  மூன்றரை மாத பயிற்சிகளை பூர்த்தி செய்தனர். பயிற்சியின்போது, திறமைகளை வெளிக்காட்டிய   இராணுவ வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
 
இந்தப் பயிற்சி நிறைவு நிகழ்வில், பிரதம அதிதியாக 23ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் டி.டி.யு.கே.ஹெட்டியாராச்சி கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதை, மரியாதை வேட்டுக்களையும்; ஏற்றுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X