2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தபால் திணைக்கள அபிவிருத்திக்கென 1500 மில்லியன் ரூபாய் ஒதிக்கீடு

Sudharshini   / 2014 நவம்பர் 24 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். ஹனீபா

 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தபால் திணைக்களத்தை அபிவிருத்தி செய்வதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி வி. விவேகானந்தலிங்கம் தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருளுடாக குறுஞ்செய்தி சேவையை வழங்குவது தொடர்பில், தபால், உப தபால் அதிபர்களுக்கு மட்டக்களப்பு கிரான்குளம் சீ மூன் காடின் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (23)  நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்து பேசுகையில்,

இலங்கையில் காணப்படுகின்ற திணைக்களங்களில் தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிப்பது தபால் திணைக்களமாகும். மேலும் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்கும் பொருட்டு குறுஞ்செய்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 656 தபாலகங்களிலும் இச்சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் 2014இல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை தபால் திணைக்களம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. எனவே, ஒரு திணைக்களத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு உத்தியோகஸ்தரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இதன்போது அவர் கேட்டுக் கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X