2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அருட்தந்தை வில்லியம் ஓல்ட்டின் 198ஆவது நினைவு தினம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 29 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து மட்டக்களப்பு மெதடிஸ்த்த கல்லூரியை உருவாக்கி சேவை செய்த அருட்தந்தை வில்லியம் ஓல்ட்டின் 198ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு பொது நூலககத்திற்கு முன்பாக உள்ள அவரது உருவச்சிலை புனரமைக்கப்பட்ட நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மெடிஸ்த்த திருச்சபையின் ஏற்பாட்டில் புலயந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் குரு அருட் தந்தை எஸ்.டெரன்ட்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டு அம்பாறை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமிபிள்ளை மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை உட்பட மெதடிஸ்த திருச்சபையின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .