2025 மே 01, வியாழக்கிழமை

மைக்கலைற் கிராண்ட் எக்ஸ்போ 2014 கண்காட்சி நாளை ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களபப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மைக்கலைற் கிராண்ட் எக்ஸ்போ 2014 கண்காட்சி நிகழ்வுகள் நாளை வியாழக்கிழமையும் (29) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும்  (30) காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளன.

முதல்நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும், 2ஆம் நாள் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ளஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்கின்றனர்.

கொளரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.கோவிந்தராஜா, அருள்திரு போல் சற்குணநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையாக  தரமுயர்த்தப்பட்டு 20 வருடங்கள் நிறைவையும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 140 வருட பூர்த்தியையும் சிறப்பிக்கும் முகமாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் திருமதி சி.எஸ்.மாசிலாமணி தெரிவித்தார்.

துரதிர்ஸ்ட வசமாக 94ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சிக்குப் பின்னர் இந்த வருடமே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இது தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஒவ்வொரு பாடத்துறைக்கும் காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வங்கிகள், மீன்பிடித் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களின் காட்சிக் கூடங்களும் நிறுவப்படவுள்ளன.

மொத்தமாக 80 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் இணைந்து முழுமையான ஏற்பாடுகளை செய்து வருவதாக பிரதி அதிபரும் கண்காட்சி இணைப்பாளருமான இரத்தினசிங்கம் பெஸ்லியோவான் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .