2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலை செல்லாத நிலையில் 21 சிறுவர்கள்

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில், பாடசாலை செல்லாமல் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 21 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேரினை பாடசாலைகளில் மீள இணைப்பதற்கான நடவடிக்கையும், 7 பேரினை தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி பிரதேச  செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் கிரான் பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி பிரிவினால் கிராம மட்ட சிறுவர் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட களத் தரிசிப்பு கடந்த வாரத்திலிருந்து இடம்பெற்று வருகின்றது.

இவற்றின் இரண்டாம் கட்ட நிகழ்வு புதன்கிழமை (14) பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரம் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

இதன்போதே மேற்படி சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இக்களப் பயணத்தின்போது, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக்கள் வழங்கவும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கவும்  இக்குழு தீர்மானித்துள்ளதாக கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் மு.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X