2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 27 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 12 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

சட்டவிரோதமாக மின்மானிகளை உடைத்து மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 27 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பிரதேசங்களிலேயே இந்த 27 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 27 பேரையும்  வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில், சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் விசேட பிரிவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே 27 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை மின்சார சபையின் புலன் விசாரணைக்கு பொறுப்பான முகாமையாளர் எல்.சேனாரத்னவின் வழிகாட்டலில் பிரதி புலனாய்வு அதிகாரி எல்.பி.சமரதுங்க, புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்களின்  தகவல்களை சேகரிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .