2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பெரியகல்லாறு தபால் நிலையத்தில் 27000 நிதி மோசடி

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு தபால் நிலையத்தில் 27000 ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும்  இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் தெவிரித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரச உதவிப் பணம் பெற வந்த பலர் நேற்று வியாழக்கிமை (13) பணம் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை பணத்தை பெற்றுகொள்ள முடியுமென தபால் நிலைய நிர்வாகிககளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விடயம்; தொடர்பில் தபால் நிலைய அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது இத்தபாலகத்திற்குரிய தபாலதிபர் பொறுப்புக்களை உரியமுறையில் ஒப்படைக்காமல் எதுவித அறிவித்தலுமின்றி திடீரென எங்கேயோ சென்று விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தபால் அத்தியட்சகர் பெரியகல்லாறு தபாலகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த தபாலகத்தில் வைக்கப்பட்டிருந்த காசு குறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னரே சரியான தொகை தெரியவரும் எனவும் தெரிவித்த அவர் பொதுமக்களின் அரச உதவிப் பணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X