2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதிய கிராம சேவையாளர்களுக்கு 3 மாத பயிற்சி

Kogilavani   / 2014 மார்ச் 10 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேச அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கிராம சேவையாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான 3 மாதகால பயிற்சி நெறி திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமானது.

மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.தயாபரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டார்.

பயிற்சி நெறிக்காக 75 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் பரீட்சைகள் நடத்தப்பட்டு, நேர்முகப்பரீட்சைகளின் பின்னர் பிரதேச செயலக வாரியாக தேர்வுகள் நடைபெற்றன.

தற்போது இரண்டு வார கால பயிற்சிகள் மாவட்ட செயலகத்தினால் நடத்தப்படவுள்ளன. இதனையடுத்து 6 வாரகாலம் பிரதேச செயலகங்களில் பயிற்றுவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் கிராமங்களில் பணிக்கமர்த்தப்படவுள்ளனர் என பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இதுபோன்று நாடளாவிய ரீதியில் அந்ததந்த மாவட்டங்களில் கிராம சேவகர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான பயிற்சிக் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X