2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வவுணதீவில் இடம்பெற்ற திவிநெகும 5ஆம் கட்ட வேலைத்திட்ட நிகழ்வு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்
 
மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவி நெகும (வாழ்வின் எழுச்சி) 5ஆம் கட்ட வேலைத் திட்டத்தின் பிரதான நிகழ்வு நேற்று முன்தினம் மங்கிகட்டுக் கிராமத்தில் இடம்பெற்ற நிலையில் பிரதேசத்தின் 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ் வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
 
மண்முனை மேற்கப் பிரதேச செயலக பிரதித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு 5ஆம் கட்ட வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
 
இதன்போது பழக் கன்றுகள், தென்னங் கன்றுகள் நடப்பட்டதுடன் திவி நெகும பயனாளிகளுக்கு விதைப் பக்கெட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந் நிகழ்வில் மண்முனை மேற்குப் பிரதேச சமூர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் மற்றும் சமூர்த்தி அதிகார சபை அதிகாரிகள் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X